×

தலைவாசலில் கால்நடை மருத்துவ கல்லூரி திறப்பு விழா முன்னேற்பாடுகள்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆய்வு

ஆத்தூர், பிப்.6: தலைவாசல் கால்நடை மருத்துவ கல்லூரி திறப்பு விழா முன்னேற்பாடு பணிகளை, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சேலம்  மாவட்டம், தலைவாசல் பெரியேரி கிராமத்தில் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய  கால்நடை ஆராய்ச்சி மையம், கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி  மையம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடனான கால்நடை பூங்கா அமைக்கப்படவுள்ளது.  இதற்கான கால்கோள் விழா, விவசாய பெருவிழா கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்  ஆகியவை வரும் 9ம்தேதி நடைபெறயுள்ளது. இந்நிலையில், நேற்று விழா ஏற்பாடு  பணிகளை, தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில்  பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  அவருடன் கால்நடை  பாரமரிப்புத்துறை செயலாளர் கோபால், இயக்குனர் ஞானசேகரன், சேலம் கலெக்டர் ராமன், மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், எம்எல்ஏக்கள்  சின்னதம்பி, மருதமுத்து, தலைவாசல் ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி பெரியேரி  ஊராட்சி தலைவர் சேகர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Inauguration of Veterinary College ,
× RELATED கத்திமுனையில் டூவீலர் பறிப்பு